ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி என மூன்று படங்களை இயக்கிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், அடுத்த படத்தை அறிவித்துள்ளார்.
இந்தப் படத்துக்கு ஹௌஸ் ஓனர் என சுத்தமான ஆங்கிலப் பெயரைச் சூட்டியுள்ளார். இந்தப் படத்தில் அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கின்றனர்.
‘ஹௌஸ் ஓனர்’ ஒரு தரமான, குடும்பத்துடன் ரசிக்கும் படமாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை. அந்த அளவிற்கு இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இப்படம் குறித்து கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ள காணொளி இதோ…