ஜேர்மனியில் தொடர்ந்து 48 மணி நேரம் பாலியல் விளையாட்டில் ஈடுபட்டதில் பெண்மணி ஒருவர் மரணமடைந்த விவகாரத்தில் அவரது கணவர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேற்கு ஜெர்மனியில் உள்ள கிரெஃபெல்ட் நகரத்தில் குடியிருப்பவர்கள் 52 வயதான ரால்ப் ஜான்கஸ் மற்றும் அவரது மனைவி கிறிஸ்டல்(49).
சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட இருவரும் தேனிலவு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில் தொடர்ந்து 48 மணி நேரம் BDSM எனப்படும் விபரீத பாலியல் விளையாட்டில் இருவரும் ஈடுபட்டுள்ளனர்.
இதில் புதுமணப்பெண் கிறிஸ்டலின் உள்ளுறுப்புகள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த நான்கு நாட்களுக்கு பின்னர் அவசரப் பிரிவுக்கு உதவி கேட்டு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆனால் அவர்களால் கிறிஸ்டலை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. உள்ளுறுப்புகள் சேதமடைந்ததால் கிறிஸ்டல் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக தற்போது ஜான்கஸ் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. காயங்களுடன் நான்கு நாட்கள் இருந்த தமது மனைவிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தவரியதாக அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமது மனைவி காயங்களுடன் இருப்பது தமக்கு தெரியாது எனவும், அவர் இது தொடர்பில் தம்மிடம் விவாதிக்கவும் இல்லை என ஜான்கஸ் விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.
விபரீத பாலியல் விளையாட்டில் ஈடுபட்டது தமது மனைவியின் ஒப்புதலுடனேயே என தெரிவித்துள்ள ஜான்கஸ்,
கடந்த 30 ஆண்டுகளாக தாம் அதுபோன்ற பாலியல் விளையாட்டுகளில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருவரும் ஒருமித்த கருத்துக்கு எட்டிய பின்னரே இந்த விளையாட்டுகளில் ஈடுபட்டதாகவும், தேனிலவு காலத்தை எஞ்சிய வாழ்க்கையில் நினைவில் நிறுத்தவே முயற்சித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மரணமடைந்த கிறிஸ்டலின் 30 வயது மகன், தமது தாயார் சிறு வயதிலேயே துஸ்பிரயோகத்திற்கு இரையானவர் எனவும், அதனால் ஏற்பட்ட உளவியல் பாதிப்பு இருந்து வந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
ஜான்கஸ் தமது தாயாரை மிக மோசமாக துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கினார் எனவும், இருப்பினும் அவர் மீதான அன்பு தமக்கு குறையவில்லை என தாயார் பலமுறை தெரிவித்ததாகவும் கிறிஸ்டலின் மகன் தெரிவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு முதல் ஒன்றாக குடியிருக்கும் ஜான்கஸ் மற்றும் கிறிஸ்டல் தம்பதிகள் சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
திருமணம் முடிந்த 8-வது நாள் கிறிஸ்டல் மரணமடைந்துள்ளதை ஜான்கஸ் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.