கல்முனை வடக்கு பிரதேச செயலக தரம் உயர்த்தல் பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வரும் பிரச்சினையாகும்.
இந்த பிரதேசத்தில் இருக்கும் மூவின மக்களுக்கும் இடையில் இணக்கப்பாடு இன்மையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு காரணமாக அமைந்துள்ளது.
எனவே கல்முனை பிரதேச சகல இன மக்களுக்கும் இடையில் பொது இணக்கப்பாடு காணப்படுமாக இருந்தால் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முடியும் என்று உள்ளக, உள்ளநாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
முஸ்லிம் காங்ரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் கக்கீம் – எச்.எம்.எம்.ஹரீஸ் – பைசல் காசிம் ஆகியோர் அமைச்சர் வஜிர அபேவர்தனவிற்கு வழங்கிய ஆலோசனைக்கு அமையவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பையோ – உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களையோ ஒரு பொருட்டாக மதிக்காமல் அரசின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமைச்சிற்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உடன் வெளியிட வேண்டிய அறிவிப்பை இப்படி இழுத்தடிப்பு செய்வதற்கு இது தான் காரணம் என கூறும் கொழுப்புச் செய்திகள்..
இது தமிழர் தரப்பிற்கு பாரிய ஏமாற்றம் என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.