தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அமலா பால். மேலும் தலைவா, வேட்டை, வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில், அம்மா கணக்கு, திருட்டு பயலே 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.
தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிஸியாக இருக்கும் முன்னணி நடிகையான அமலா பால் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்ட ஒரே வருடத்தில் அவரை விட்டு பிரிந்தார்.
விவாகரத்தான பிறகு சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வரும் நடிகை அமலாபால் கவர்ச்சி காட்டவும் தயங்குவதில்லை. சமீபத்திய படங்களில் அவர் மிக கிளாமராக தோன்றியுள்ளார்.
மேயாதமான் படத்தை இயக்கிய இயக்குனர் ரத்னகுமாரின் அடுத்த படமான ‘ஆடை’யில் அமலாபால் நடித்து வருகிறார். நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்கள் முன்பு வெளியானது. அதில் அவர் ஆடை ஏதும் இல்லாமல் டேப்பை மட்டும் சுற்றி உள்ளார். அவரை யாரோ தாக்கியது போல அவரது உடலில் சில ரத்தகாயங்கள் உள்ளன. இதனை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆடை படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆடை இன்றி அமர்ந்துள்ளார். இதனில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில்., இதுகுறித்த காட்சிகள் குறித்து திரைப்படத்தின் இயக்குனரிடம் கேட்ட சமயத்தில்., இந்த காட்சிக்கான தேர்வினை முதலிலேயே சோதனை செய்து., திரைப்படம் எடுக்கப்படும் காட்சிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதற்கு பின்னர் அவரின் மூளும் சம்மதம் பெற்று அவருக்கு பாதுகாப்பான மேலாடைகள் தந்த பின்னரே அவர் அந்த காட்சியில் நடித்திருந்தார். இதன் காரணமாக இது குறித்து சர்ச்சைகள் தேவையில்லை. காட்சிக்கான படப்பிடிப்பு இடமும் சிறுசேரியில் இருக்கும் தொழிற்சாலை என்பதால்., காட்சிக்கான இடத்தில் யாரையும் அனுமதிக்கவில்லை. அலைபேசியையும் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.