விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்த மண்ணில் இருக்கும் வரை தமிழீழத்தின் இறைமை மட்டுமல்ல இலங்கையுடைய இறைமையும் பேணி பாதுகாக்கப்பட்டிருந்தது என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
யாழ் சுழிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரபாகரன் இந்த மண்ணில் இருக்கும் வரை வளங்கள் பாதுகாக்கப்பட்டது. அதே போன்று தமிழீழத்தினதும், இலங்கையினதும் இறைமை பாதுகாக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளின் தாக்குதலின் பின்னர் அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய ஆதிக்கத்தை இந்த நாட்டினுள் கொண்டு வந்துள்ளார்கள். அதிலும் நீயா நானா என்ற போட்டியில் அவர்கள் உள்ளனர். இந்த நிலைமை இலங்கையின் இறைமையை கேள்விக்குறியாக்கி உள்ளது.
உண்மையில் அவர்கள் தங்கள் தங்கள் தேவைகளுக்காக தங்கள் ஆதிக்கத்தை இங்கு கொண்டு வந்துள்ளனர் ஆனால் அந்த ஆதிக்கம் என்பது உண்மையில் எங்கள் மக்களுக்காக அல்ல” அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.