நீ யாருடனும் வாழு… எனது மகனை தந்துவிடு என்று அன்றே கேட்டேனே..!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள இராணிப்பேட்டை சிப்காட் பகுதியை சார்ந்தவர் இராமச்சந்திரன். இவரது மனைவியின் பெயர் காவியா. இராமச்சந்திரன் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில்., இவர்கள் இவருக்கும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது.

இவர்கள் இருவருக்கும் நான்கு வயதுடைய தருண் என்ற அழகிய குழந்தை இருக்கும் நிலையில்., குடும்பத்தகாரரின் காரணமாக காவியா தனது கணவரை பிரிந்து குழந்தையுடன் தனது தாயாரின் இல்லத்திற்கு வந்துள்ளார். இந்த நிலையில்., அங்குள்ள ஆசிரியர் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயின்ற காவியாவிற்கு., தியாகராஜன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இருவரின் பழக்கமானது நட்பு வட்டாரத்தில் இருந்து வந்த நிலையில்., இவர்கள் இருவரும் காதலித்து சென்ற ஜனவரி மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்திற்கு பின்னர் தியாகராஜன் மற்றும் காவியா குழந்தையுடன் வசித்து வந்த நிலையில்., இவர்களின் உல்லாச மோகத்திற்கு குழந்தை தடையாக இருப்பதாக கருதியுள்ளனர்.

இதனையடுத்து குழந்தையை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டு., வேறு ஒரு வீட்டிற்கு அவசர அவசரமாக குடியேறியுள்ளனர். இந்த நிலையில்., கடந்த 13 ஆம் தேதியன்று வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தையை அண்டாவில் மூழ்கடித்து குழந்தையை துடிதுடிக்க இருவரும் கொலை செய்துள்ளனர். குழந்தை இறந்தவுடன் குழந்தையை சாக்கு மூட்டையில் கட்டி அங்குள்ள பாலாறு பகுதியில் குழி தோண்டி புதைத்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் எதையும் அறியாத காவியாவின் குடும்பத்தினர் மற்றும் இராமச்சந்திரனின் குடும்பத்தினர் குழந்தையுடன் இருவரும் நலமாக இருக்கின்றனர் என்று எண்ணி இருந்துள்ளனர். இந்த நிலையில்., காவியாவின் தாயார் வீட்டிற்கு வந்த சமயத்தில் குழந்தை எங்கே என்று கேட்கவே., துவக்கத்தில் மழுப்பிய காவியா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டர்.

இந்த நிகழ்விற்கு பின்னர் அங்குள்ள கிராம அலுவலரின் அலுவலகத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்த நிலையில்., இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு., காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த செய்தியை அறிந்த தியாகராஜன் தலைமறைவாகவே நிலையில்., நேற்று தியாகராஜனையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில்., காவியாவிற்கும் – எனக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில்., காவியாவிற்கு தருண் என்ற மகன் இருந்தான். காவியாவின் முதல் கணவர் தருணை தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று கூறி பல முறை முறையிட்டு வந்தார். இதனையடுத்து குழந்தையை அவருடன் அனுப்புவதற்கு நான் சம்மதம் தெரிவித்த நிலையில்., மகனை அனுப்ப முடியாது என்று காவியா கூறினார்.

இதனால் எங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சமயத்தில் அடுத்தவரின் மகனை நான் ஏன் வளர்க்க வேண்டும் என்று கேட்கவே., தருண் இருப்பதால் நமக்கு இடையே பிரச்சனை ஏற்படுகிறது. தருணை கொலை செய்து விடுவோம் என்று இருவரும் முடிவு செய்து தருணை கொலை செய்து., பாலாற்றில் புதைத்தோம் என்று அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.