அசாம் மாநிலம் ஜோர்கத் விமானப்படை தளத்தில் இருந்து, அருணாச்சல பிரதேசத்தின் மெஞ்சுகா பகுதியை நோக்கி இந்திய விமானப்படையின் ஏ.என்-32 ரக விமானம் நேற்று புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் ஊழியர்கள் மற்றும் பயணிகள் உட்பட மொத்தம் 13 பேர் அந்த விமானத்தில் பயணம் செய்தனர்.
அந்த விமானம் புறப்பட்டு 2 மணி நேரத்திற்கு மேல் ஆகியும், மெஞ்சுகா விமானப்படை தளத்தை அடையவில்லை. இதனால் மாயமான விமானத்தை கண்டறிய இஸ்ரோவின் ரிசார்ட் வகை செயற்கைக்கோள்களின் மூலமாக, விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஜூன் 3ம் தேதி 13பேருடன் காணாமல்போன அந்த விமானம் அருணாச்சலப்பிரதேசத்தின் சியாங் மாவட்டத்திற்குட்பட்ட மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்பொழுது அந்த விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிருடன் இல்லை என அறிவிக்கப்பட்டது.
விமானத்தில் பயணம் மேற்கொண்ட 13 பேரும் உயிரிழந்து விட்டதாக விமானப்படை அறிவித்தது. இதனை தொடர்ந்து உடல்களை மீட்கும் பணி நடைபெற்றது. இருப்பினும் மோசமான வானிலை காரணமாக , உடல்களை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், ராணுவம் தரப்பில் 17 நாட்களுக்குப் பிறகு, பலியானவர்களில் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 பேரின் உடல்கள் சேதம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.தெரிவிக்கப்பட்டுள்ளது.