இலங்கை தாக்குதல்கள் குறித்து ரஸ்யா!

சிரியா ஈராக்கில் முன்னர் தீவிரமாக செயற்பட்ட ஐஎஸ் உறுப்பினர்களே இலங்கையில் குண்டுவெடிப்புகளை திட்டமிட்டார்கள் என ரஸ்ய பாதுகாப்பு சபையின் பிரதி செயலாளர் யூரிகொகோவ் தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவின் உவா நகரில் இடம்பெற்ற பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான சர்வதேச கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள ஐஎஸ் கட்டமைப்புகளை அடிப்படையாக கொண்டு இலங்கையில் உள்ள சர்வதேச ஜிகாத்தின் ஆதரவாளர்கள் இந்த தாக்குதல்களை திட்டமிட்டுள்ளனர் என நிபுணர்கள் கருதுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிரியா ஈராக்கில் ஐஎஸ் அமைப்பிற்காக நடவடிக்கைகளில் ஈடுபட்ட பின்னர் இலங்கை திரும்பிய உள்ளுர் தீவிரவாத குழுவொன்றே குண்டுவெடிப்புகளை திட்டமிட்டது எனவும் ரஸ்ய அதிகாரி தெரிவித்துள்ளார்.

முன்னர் ஐஎஸ் அமைப்பினர் உறுப்பினர்களை சிரியா ஈராக்கிற்கு வருமாறு அழைத்தனர் தற்போது சொந்த நாடுகளில் தங்கியிருந்து தாக்குதல்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அச்சுறுத்தல்கள் ஐரோப்பிய நாடுகளிற்கும் பொருந்தக்கூடியவை எனவும் ரஸ்ய அதிகாரி தெரிவித்துள்ளார்.