ஹிஸ்புல்லாவிற்கு எதிராக 2015ம் ஆண்டிலிருந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியது மட்டுமல்லாது, பல போராட்டங்களையும் முன்னெடுத்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் தலைவர்களுக்கு எதிராக தாம் போராடியபோது, ஓடி ஒழிந்துகொண்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தற்போது தம்மை குற்றம்சாட்டுவதாக எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் நிறுத்தப்படும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் ஆகியோர் ஒரே மேடையில் வாக்கு சேகரிப்பார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பாக கொழும்பு ஊடகமொன்றுக்கு இன்று கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக பல முறைப்பாடுகளையும் பதிவு செய்துள்ளேன். இந்நிலையில் மக்கள் எம்மீது கொண்டுள்ள உறவை பொறுக்க முடியாமலே அவர் இவ்வாறான கருத்துக்களை வெளயிடுகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.