கல்பிட்டி அல் மனார் பகுதியில் வசிக்கும் முச்சக்கரவண்டி சாரதியான ராசிக் என்பவருடைய மனைவி (ஆசிரியர்) பாடசாலை முடிந்து வீடு திரும்பும் போது வீதியில் (அல் மனார் 3வது ஒழுங்கை)யில் #பணம் கட்டு ஒன்று கிடப்பதை கண்டுள்ளார்.
அதை வீதியிலே விட்டு விடாமல் உரியவரிடம் ஒப்படைப்பதற்காக பத்திரமாக எடுத்து தனது கணவரிடம் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை வேலையில் அதே வீதி வழியாக வந்த நபர் ஒருவர் எதையோ தேடுவதை கண்ட ராசிக் அவரிடம் சென்று என்னவென வினவியுள்ளார்.
அதற்கு அந்த நபர் அவசர தேவைக்காக தனது காணியை விற்பனை செய்த 85000 ரூபா பணத்தை தனது சட்டை பையில் வைத்திருந்ததாகவும், தனது பேரனுக்கு மண்டையில் அடிப்பட்டு மண்டை உடைந்ததால் அவசரத்தில் அதே சட்டையை அணிந்து பேரனை இந்த வழியாக வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போது பணம் தொலைந்ததாகவும் கூறியுள்ளார்.
அப்போது அவருக்கு ஆறுதல் கூறிய ராசிக் நடந்ததைக் கூறி பணத்தை அவரிடம் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் குறித்த ஆசிரியையையும் அவரது கணவரையும் பலரும் பாராட்டியுள்ளனர்.