குப்பை தொட்டியில் கிடந்த குழந்தை! இயக்குனர் செய்த செயல்..

சமீபத்தில் ராஜஸ்தானில் Nagaur என்ற இடத்தில் குப்பை தொட்டியில் ஒரு பெண் குழந்தை இருக்கும் வீடியோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலானது.

அது 1.6 கிலோ எடை மட்டுமே இருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கும்போது மூச்சுவிட சிரமப்படும் நிலையில் தான் குழந்தை இருந்துள்ளது. அந்த வீடியோவை பார்த்த பிரபல பாலிவுட் இயக்குனர் வினோத் காப்ரி தான் அந்த குழந்தையை தத்தெடுப்பதாக கூறி, அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்.

அந்த குழந்தைக்கு அவர் Pihu என்ற பெயரும் சூட்டியுள்ளார். அவர் இயக்கிய படத்தின் பெயர் தான் இது. அந்த படத்தில் ஒரு 2 வயது குழந்தை, அம்மா இறந்துவிட்ட நிலையி, வீட்டில் தனியாக இருக்கும்போது நடக்கும் சம்பவங்கள் பற்றி காட்டப்பட்டிருக்கும்.

தத்தெடுக்க முயற்சி செய்து வரும் அவரது செயலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. மேலும் அந்த குழந்தையுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வைரலாகியுள்ளது.