பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கிய இயக்குனர் ராஜமௌலி தற்போது ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் RRR படத்தினை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் இருந்து வெளிநாட்டு நடிகை ஒருவர் சமீபத்தில் விலகிவிட்டார். அந்த இடத்திற்கு வேறு சில நடிகைகளை ராஜமௌலி அனுகியுள்ளார்.
இந்நிலையில் என்டிஆர் ஜோடியாக நடிக்க ஸ்ரீதேவி மகள் ஜான்வியை அவர் அணுகியுள்ளார். ஆனால் அவர் இந்த கதாபாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவம் இல்லை என கூறி நிராகரித்துவிட்டாராம்.
பாகுபலி படத்தில் ரம்யாகிருஷ்ணன் நடித்திருந்த வேடத்தில் முதலில் ஸ்ரீதேவியை தான் ராஜமௌலி நடிக்கவைக்க விரும்பினார். ஆனால் அவர் போட்ட கண்டிஷன்கள் பிடிக்காமல் அவரை நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.