இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் உடலை கிண்டல் செய்யும் விதமாக புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், அதற்கு அந்தணியின் முன்னாள் வீரர் மஹெல ஜெயவர்த்தனே சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் கொஞ்சம் தடுமாறும் அணிகளின் வரிசையில் பலரும் இலங்கை அணியின் பெயரை கூறினர்.
ஆனால் நேற்று இங்கிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 232 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து, அதில் இங்கிலாந்தை 212 ஓட்டங்களுக்குள் சுருட்டு, ஓவராக ஆட்டம் காட்டி வந்த அந்தணியை அடி பணிய வைத்தது.
அதுமட்டுமின்றி புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்திலும் உள்ளது.
இந்நிலையில் போட்டி துவங்குவதற்கு முன்பு இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரரான மலிங்காவின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலானது, அதில் மலிங்காவின் உடல் எடை அதிகரித்துவிட்டதாகவும், அவர் வயிற்றைப் பார்த்தால் கர்ப்பமாக இருப்பது போல் தெரிவதாகவும் இணையவாசிகள் கிண்டல் செய்து வந்தனர்.
ஆனால் நேற்றைய போட்டியில் இணையவாசிகளால் கிண்டல் செய்யப்பட்ட மலிங்கா தான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
View this post on Instagram
இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான மஹெல ஜெயவர்த்தனா மலிங்காவை கிண்டல் செய்யும் விதமாக வெளியிடப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு, கடந்த வாரம் இந்த புகைப்படத்தை வைத்து தான் பேசிக் கொண்டீருந்தீர்கள், ஆனால் அதை எல்லாம் தாண்டி சாதித்துவிட்டீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் புத்தகத்தின் உள்ளே இருப்பதை தான் பார்க்க வேண்டும் தவிர, புத்தகத்தின் கவரை பார்க்க கூடாது என்று இணையவாசிகள் பலரும் மலிங்காவிற்கு ஆதரவாக கூறி வருகின்றனர்.