ஆந்திர மாநில முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து வருகின்றனர்.
சுகாதாரத்துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் ரூ. 3000 இருந்து ரூ. 10000-மாக உயர்த்தி உள்ளார். விவசாயிகளுக்காகரையத் பரோசா என்ற திட்டத்தின் மூலம் 12 500 வரை சலுகை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார். இது மட்டுமில்லாமல் 5 முதலமைச்சர்களை நாட்டிலேயே முதல்முறையாக நியமித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் முதல் ரேஷன் பொருட்கள் வீட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திர காவல் துறையில் காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை அனைவருக்கும் வாரம் ஒரு முறை விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 67 804 காவலர்கள் பயன்வருகள். இந்த திட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைவராக சுப்பா ரெட்டி நியமித்துள்ளனர். இவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் ஆவார்.
இன்று முதல் சுப்பா ரெட்டி திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைவராக அதிகாரப்பூர்வமாக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.