கொடூரமாக கொலை செய்யப்பட்ட மனைவி… கணவனின் உண்மை முகம் அம்பலம்

பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாக கொலை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தலைநகரான லண்டனின் Ilford பகுதியைச் சேர்ந்தவர் Muhammad Javed. 59 வயதாகும் இவருக்கு Saeeda Hussain என்ற 54 வயது மனைவி உள்ளார்.

இந்த தம்பதிக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு 13-ஆம் திகதி பிப்ரவரி மாதம் Muhammad Javed தன்னுடைய மனைவியை கொலை செய்துவிட்டேன் என்று கூறி காவல்நிலையத்தில் சரணடைந்தார். பாகிஸ்தான் விமானப்படையில் 20 ஆண்டுகள் பணியாற்றிய இவர் அதன் பின் பிரித்தானியாவிற்கு குடி பெயர்ந்துள்ளார்.

இதையடுத்து இவரை கைது செய்த பொலிசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் இது தொடர்பான வழக்கு விசாரணையும் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

Saeeda Hussain சின்ன டெய்லரிங் தொழில் செய்து வந்துள்ளார். அப்போது அவரிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் இவர் சகஜமாக பேசி பழகியுள்ளார். இதைக் கண்ட Muhammad Javed-வுக்கு மனைவி மீது சந்தேகம் ஏற்பட, தொடர்ந்து அவரை பாலியல் ரீதியாக மற்றும் உடல் ரீதியாக தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.

திருமணம் ஆன 30 ஆண்டுகளில் பல ஆண்டுகள் அவர் இந்த கொடுமையை சந்தித்து வந்துள்ளார்.

இது குறித்து பொலிசாரிடம் புகார் அளித்தால், கணவர் நாடு கடத்தப்படலாம், இது அவமானமாக இருக்கும் என்று கருதி அவர் கூறாமல் இருந்து வந்துள்ளார்.

அப்படி ஒரு கட்டத்தில் இருவரும் ஒரே அறையில் தூங்கும் போது, தன் மனைவி Saeeda Hussain-னின் முதுகில் ஏதோ ஒன்று ஒரு வித அடையாளத்தை கண்டுள்ளார்.

இதனால் சந்தேகத்தின் உச்சிக்கு சென்ற அவர் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சுத்தியலால் அவரை தாக்கி கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.

அதன் பின் சம்பவ தினத்தன்று மாலை 6 மணிக்கு காவல்நிலையத்தில் மனைவியை கொலை செய்துவிட்டேன் என்று கூறி சரணடைந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்த போது, அவரது மகள் Sidra Hussain கூறுகையில், என்னுடைய அம்மா நல்லவர், என் அப்பா தான் அவரை கொலை செய்துவிட்டார்.

எங்களுடைய குடும்பத்திற்காகவே என் அம்மா வாழ்ந்து வந்தார் என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.

இதையடுத்து நீதிபதி Muhammad Javed-வுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.