யோகா தினத்தில் தந்தையுடன் யோகா குறும்பு செய்த சுட்டி குழந்தை.!

இன்றைய காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் கவனமாக கையாளக்கூடிய கலைகளில் ஒன்றாகும். மேலும் பெற்றோர்கள் வளர்ப்பின் படியே ஒரு குழந்தை சிறந்த மனிதனாக இந்த சமூகத்தில் பிரதிபலிக்க முடியும். குழந்தைகளை பராமரிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. நாம் எவ்வளவுதான் கவனமாகவும், பொறுப்பாகவும் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டாலும், அவை எந்த நேரத்தில் என்ன சேட்டை செய்யும் என்பது யாருக்கும் தெரியாது.

அவ்வாறு குழந்தை செய்யும் சேட்டையால் சில சமயங்களில் பெரும் விபரீதமே ஏற்படலாம். எனவே ஒவ்வொரு பெற்றோர்களும் எந்நேரமும் குழந்தைகளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒருபுறமிருக்க சில குழந்தைகள் அவர்களின் அறிவார்ந்த செயல்கள் மற்றும் எண்ணத்தால் மக்களின் மனதை வென்று வருகின்றனர். அவ்வாறு உள்ள சில குழந்தைகளின் நகைச்சுவை மற்றும் நல்ல எண்ணத்தை எதிர்பாராத நேரத்தில் காட்சிகளாக பதிவு செய்து இணையத்தில் பெற்றோர்கள் பதிவிடுகின்றனர்.

இது குறித்த வீடியோ பதிவுகள் அவர்களின் பேச்சுக்கள் மற்றும் நல்ல எண்ணங்களை பொறுத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிகளவில் இணையத்தில் பரவி., அந்த குழந்தைகள் மக்கள் மத்தியில் நல்ல எண்ணங்களை விதைத்து., அவர்களின் மனதில் வாழ்கின்றனர். கடந்த சில வருடங்களாகவே இது போன்ற குழந்தைகளின் வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகளவு வைரலாகியது. அதனை போன்று சங்கமா? சாப்பாடா? என்ற கேள்விக்கு சாப்பாடுதான் முக்கியம்., பசிக்குமுள்ள… என்று தனது சுட்டித்தனத்தால் அதிகளவு மக்களை கவர்ந்ததையும் அறிவோம்.

அந்த வகையில்., நேற்று இந்திய அளவில் யோகா தினமானது கொண்டாடப்பட்டது. இந்த தினத்தில் நடிகர் நடிகைகள்., அரசியல் கட்சியினை சார்ந்த பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பெரும்பாலனோர் கலந்து கொண்டு சிறப்பித்த நிலையில்., ஒரு இல்லத்தில் யோகா தினத்திற்கு தந்தை ஒருவர் யோகா செய்யும் சமயத்தில்., அவரின் குழந்தை செய்யும் சுட்டி சேட்டைகள் குறித்த காமெடி வீடியோ பதிவானது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த விடியோவை பார்க்கும் சமயத்தில் மகிழ்ச்சியும்., அன்பும் நம்மை இன்பத்தில் ஆழ்த்துகிறது.