கிராமங்களில் தங்குதல் என்ற திட்டத்தின் கீழ் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி யாத்கிர் அருகே உள்ள சந்திராகி கிராமத்தில் தங்கினார். பள்ளி குழந்தைகளுடன் சேர்ந்து இரவு உணவு உண்டார். ஆனால் அங்கு குமாரசாமிக்கு ஐந்து நட்சத்திர வசதிகள் செய்து தரப்பட சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து பதிலளித்த முதலமைச்சர் குமாரசாமி என்ன ஐந்து நட்சத்திர வசதி என்று கேள்வி எழுப்பினார். நான் தரையில் கூட படுத்து உறங்க தயார் என்று பதிலளித்தார். தனக்கு குறைந்தபட்ச வசதி கூட இருக்க கூடாது என்று எதிர்க்கட்சிகளிடம் கேள்வி எழுப்பினார். ஓய்வு இல்லாவிட்டால் தன்னால் பணிகளை எப்படி கவனிக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
சின்ன குளியலறை கட்டப்பட்டிருப்பதாக ஒப்புக்கொண்டார். அதை தனது வீட்டிற்கு கொண்டு செல்லப் போவதில்லை என்று கூறினார். மேலும் மக்களை குறைகளை கேட்பதை விட பகலில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பள்ளிகளில் அமர்ந்து குறைகளை கேட்டறிந்து, அதற்கு உடனே தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிகளில் நாம் அமர்ந்து குறை கேட்பதால், அங்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கும். இதனால் மாணவர்கள் பயனவர்கள். மேலும் கால்நடை மருத்துவமனை, 300 படுக்கை வசதி கொண்ட பொது மருத்துவமனை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
யாதகிரி, கலபுர்கி மாவட்டங்களில் விவசாய கடன் தள்ளுபடி செய்வது குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட கூட்டுறவு வங்கி காரணம். இது குறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி செய்து வருகிறது.
ஆனால், அவர்கள் என்ன முயற்சி செய்தாலும் கூட்டணி அரசை கவிழாது. இன்னும் 4 ஆண்டுகள் ஆட்சியில் காங்கிரஸ் மட்டும் மதசார்பற்ற கூட்டணி முழுமையாக நிறைவு செய்யும் என்று முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.