எனக்கு அந்த பட தலைப்புத்தான் வேண்டும்..! சிவகார்த்திகேயன்..!!

தற்போதையை தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும்., இளம் தயாரிப்பாளராகவும் தனது திறமையால் வெற்றி நடைபோட்டுக்கொண்டு இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.

மிஸ்டர்.லோக்கல் திரைப்படத்திற்கு பின்னர் சிவகார்த்திகேயன்., கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தின் இயக்குனரான பாண்டியராஜ் இயக்கத்தில் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு திரைபடக்குழு சார்பில் படத்தின் தலைப்பு “எங்க வீட்டு பிள்ளை” என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது.

இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷா மேற்கொண்ட நிலையில்., இந்த படத்திற்கான இசையமைப்பு பணிகளை இசையமைப்பாளர் டி.இமான் பார்த்துக்கொள்கிறார். இந்த படத்தில் பாரதிராஜா., ஐஸ்வர்யா ராஜேஷ்., யோகிபாபு., சூரி., சமுத்திரக்கனி மற்றும் அணு இமானுவேல்., நடராஜ் ஆகிய பல முன்னணி நடிகர்கள் நடித்து கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில்., திரைப்படத்தின் தலைப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ள “எங்க வீட்டு பிள்ளை” தலைப்பின் உரிமையானது விஜயா ப்ரொடக்ஷன் நிறுவனத்தில் இருக்கும் நிலையில்., திரைப்படத்தின் தலைப்பை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்க கூறி படக்குழு விஜயா ப்ரொடெக்ஷன் நிறுவனத்தை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் தலைப்பு விஷயத்தில் அதிகளவு சிவகார்த்திகேயன் முக்கியத்தும் கொடுத்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.