இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் தொடர்ந்து வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் பெரும்பாலும் பெண்களுக்கு நன்கு தெரிந்த மற்றும் பழகிய நபர்களாலேயே அளிக்கப்படும் செய்தியானது பெரும் அதிர்வலையை பதிவு செய்கிறது.
இந்த நிலையில்., சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகேயுள்ள நங்கவல்லி வீரக்கல்பட்டியில் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று யாரும் நிலையில்., இவர் இன்று காலை குளிப்பதற்காக குளியலறைக்கு சென்றுள்ளார்.
இந்த சமயத்தில்., மாணவி குளித்துக்கொண்டு இருக்கும் சமயத்தில்., குளியலறையின் காற்றோட்ட அமைப்பில் (வெண்டிலேட்டர்) இருந்து காம கொடூர வாலிபன் ஒருவன் அலைபேசியில் வீடியோ பதிவு செய்வதை கண்டுள்ளார்.
இதனை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான மாணவி பயந்துபோய் சப்தம் எழுப்பவே., இவரின் அலறல் சத்தத்தை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக வெளியே வந்து பார்த்ததில்., இளைஞன் ஒருவன் மாணவி குளிப்பதை வீடியோ பதிவு செய்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ஆத்திரமடைந்த உறவினர்கள் இளைஞனை துரத்தி பிடித்து ஆத்திரம் தீரும் வரை நையப்புடைத்து., காவல் துறையினருக்கு இந்த சம்பவத்தை பற்றி தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில்., இந்த கொடூர எண்ணத்தில் ஈடுபட்ட வாலிபன் அங்குள்ள சூரமங்கலம் பகுதியை சார்ந்த சதீஷ் குமார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவனை கைது செய்த காவல் துறையினர்., வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்து திருச்சி சிறையில் அடைத்தனர்.