வரதட்சணை அதிகளவு கேட்டு மருமகளுக்கு தொல்லை கொடுத்த மாமனார்.!

இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் தொடர்ந்து வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் பெரும்பாலும் பெண்களுக்கு நன்கு தெரிந்த மற்றும் பழகிய நபர்களாலேயே அளிக்கப்படும் செய்தியானது பெரும் அதிர்வலையை பதிவு செய்கிறது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் உள்ள பகுதியில் வசித்துவரும் தம்பதியினர் அமிர்தராஜ் – புனித பவானி. இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக திருணம் நடைபெற்று முடிந்த நிலையில்., வரதட்சணையாக சுமார் 40 பவுன் தங்க நகைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாது ரூ.3 இலட்சம் மதிப்புள்ள சீர்வரிசையையும் செய்யப்பட்ட நிலையில்., பவானிக்கு பவானியின் மாமனார் பாலியல் தொல்லை வழங்கி வந்துள்ளார். சில காலம் பொருந்துகொண்ட பவானி எதிர்த்து கேட்ட சமயத்தில்., அதிக தொகையில் மீண்டும் வரதட்சணை வழங்குமாறு கேட்டு துன்புறுத்தி வந்துள்ளான்.

இதனால் ஆத்திரமடைந்த பவானி இது குறித்து அங்குள்ள திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கியுள்ளனர். இந்த நிலையில்., பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதராக மாதர் சங்கமும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு அந்த பகுதியில் ஏற்பட்டது.