நாளுக்கு நாள் தற்போது செல்போன் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அளவுக்கு அதிகமாக அனைவரும் தற்போது செல்போன்கள் பயன்படுத்தி வரும் நிலையில் உள்ளோம்.
குறிப்பாக இளைய தலைமுறையினர் தற்போது சமூக வலைதளங்கள், கேம்ஸ் போன்றவற்றை பயன்படுத்தி அதிக இளைஞர்கள் தங்களது நேரத்தை செல்போனில் கழிக்கின்றனர்.
சாலைகளில் நடக்கும் போது கூட தலை குனிந்தபடியே செல்போனை பயன்படுத்தி வருகிறார்கள் இதனால் நிறைய விபத்துகளும் நிகழ்ந்துள்ளது.
தற்போது செல்போனை அதிகம் பயன்படுத்துவதால் தலையின் பின்புறம் உள்ள மண்டை ஓட்டிற்குள் ஒரு எலும்பு வளர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர் அதிக நேரம் செல்போன் தலை குனிந்தபடியே பயன்படுத்துவதால் முழு எடையும் பின்புறம் செல்கிறது இதன் காரணமாக தலையின் பின்புறம் மண்டையோட்டில் கூர்மையான எலும்பு ஒன்று வளர்கிறது என்று தெரிவித்துள்ளார்.