இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் தொடர்ந்து வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் பெரும்பாலும் பெண்களுக்கு நன்கு தெரிந்த மற்றும் பழகிய நபர்களாலேயே அளிக்கப்படும் செய்தியானது பெரும் அதிர்வலையை பதிவு செய்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் அருகேயுள்ள பகுதியை சார்ந்த இளம்பெண்ணொருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில்., நேற்று அந்த பெண் பணியை முடித்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்த சமயத்தில்., அவரது நண்பரான அருள்ஜோதி என்பவன் அவரை அங்குள்ள இரயில்வே கேட் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
இந்த சமயத்தில்., அருள்ஜோதியின் நண்பர்கள் அங்கு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்., இவர்கள் எதற்கு வந்துள்ளனர் என்று கேட்கவே., உடனடியாக அவரை தூக்கி சென்று கூட்டுப்பலியால் வன்கொடுமை செய்துள்ளனர். இதுமட்டுமல்லாது பலாத்காரம் செய்து பாதிக்கப்பட்ட பெண்ணை இரயில்வே தண்டவாளத்தில் தரதரவென இழுத்து சென்றுள்ளனர்.
இந்த நேரத்தில்., இவரின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததை அடுத்து., காம கொடூர கும்பலானது சம்பவ இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை அங்குள்ள புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.