சென்னையில் குடும்ப தகராறு காரணமாக பெண் மருத்துவர் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், எலும்பு பிரிவு மருத்துவராக பணிபுரிந்து வருபவர் மகரஜோதி (41). இவர் அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் வளர்மதி (36) என்பவரை திருமணம் செய்துள்ளார்.
இந்த தம்பதியினருக்கு 12 வயதில் ரிஷித் என்கிற மகனும், 4 வயதில் ஓமிஷா என்கிற மகளும் உள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே கணவன் மனைவிக்கு இடையில் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இவர்களுடைய மகன் ரஷித், சைக்கிளில் பள்ளி சென்று வர ஆசைப்பட்டுள்ளான். ஆனால் இதற்கு வளர்மதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதனையும் மீறி நேற்று ரஷித் சைக்கிளில் பள்ளி சென்று வந்துள்ளான். இதனால் கணவன்-மனைவிக்கு இடையில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் மனமுடைந்த காணப்பட்ட வளர்மதி, படுக்கை அறை ஜன்னலில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவமானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.