தமிழ் சினிமாவில் பல வருடங்கள் முன்னணி நடிகையாக இருந்தவர் தேவயானி. இவர் விஜய், அஜித், விக்ரம், சூர்யா என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். இவர் அதிகமாக குடும்பபாங்கான படங்களில் நடித்துள்ளார். அதிக கவர்ச்சியை இதுவரைக்கும் இவர் காட்டியது இல்லை.
தன்னை வைத்து இயக்கிய இயக்குனர் ராஜ்குமாரை கடந்த 2001ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்பு தன்னுடைய நடிப்பை நிறுத்திய தேவயானி, அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்து வந்தார். அதுமட்டுமல்லாமல் சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டு வருகிறார்.
தேவயானிக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் இரண்டு பேர் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது. அதில் ஒரு மகள் தேவயானி போல அச்ச அசலாக இருப்பதை குறித்து மக்கள் எல்லோரும் ரொம்பவே ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.