சென்னையில் கணவர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போரூரை சேர்ந்தவர் மகேஷ் (25). இவரது மனைவி அஸ்வினி. இந்த தம்பதிக்கு பிரதீப் (4), சக்திவேல் (2) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
பிரதீப்பிற்கு பிறவிலேயே காது கேட்கும் திறன் இல்லை. வாய் பேசவும் மாட்டான். இதனால் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து தற்போது பேச்சு பயிற்சி பெற்று வந்தான்.
இந்நிலையில் இளைய மகன் சக்திவேலை பரிசோதித்த மருத்துவர்கள் அவனுக்கும் காது கேட்காத குறை இருப்பதாக தெரிவித்தனர். ஏற்கனவே ரூ.3 லட்சம் வரை செலவு செய்து மூத்த மகனுக்கு சிகிச்சை பெற்ற நிலையில் இளைய மகனுக்கும் அதே பிரச்சினை ஏற்பட்டதால் அஸ்வினி மனவேதனை அடைந்தார்.
இதையடுத்து அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
இந்நிலையில் மூத்த மகனை மாமியார் வீட்டில் கொண்டு விட்டு விட்டு திரும்பி வந்த மகேஷ், வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததை பார்த்து கதவை உடைத்து உள்ளே சென்றார்.
அங்கு அஸ்வினி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் மகன் சக்திவேலை அஸ்வினி தலையணையால் அமுக்கி கொலை செய்து விட்டு தற்கொலை முடிவு எடுத்ததையும் உணர்ந்தார்.
பின்னர் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் இரு சடலங்களையும் கைப்பற்றி விட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.