தமிழில் ‘திமிரு’, ‘சிலம்பாட்டம்’, ‘மரியான்’ உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக நடித்தவர் விநாயகன். சமீபத்தில், கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலர் மிருதுளா தேவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இவரை அழைத்துள்ளார்.
அப்போது, சமூக ஆர்வலர் மிருதுளா தேவியிடம் விநாயகன் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சமூக ஆர்வலர் மிருதுளா தேவி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், இவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.