டான்ஸிலிடிஸ் பாதிப்பிலிருந்து விடுதலை வேண்டுமா?

டான்ஸிலிடிஸ் பெரியவர்களில் விட குழந்தைகளில் மிகவும் பொதுவாக ஏற்படுகிறது .

இது சிறு நாக்கின் பக்கவாட்டில் வரும் ஒரு தொற்றாகும்.

பெரும்பாலும் சுத்தமில்லாத நீரினை குடித்தால், அல்லது அதிக குளிர்ச்சியான உணவுகளை தொடர்ந்து உட்கொண்டால் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது எனப்படுகின்றது.

இதனை சரி செய்ய வெங்காயம் பெரிதும் உதவி புரிகின்றது. இதில் கிடைக்கும் சாறு டான்ஸிலிடிஸ் குணப்படுத்துகின்றது.

வெங்காயச் சாறில் கொப்பளித்தால், எளிதில் ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் என சொல்லப்படுகின்றது.

மேலும் வெங்காயத்தில் கிருமியை எதிர்க்கும் குணங்கள் உள்ளதால் டான்ஸிலிடிஸ் எப்படி சரி செய்வது என்பதை இங்கு பார்ப்போம்.

தேவையானவை
  • வெங்காயம் – 1
  • வெதுவெதுப்பான நீர் – 1 கப்
செய்முறை

முதலில் வெங்காயத்தை அரைத்து அதன் சாறினை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை வெதுவெதுப்பான நீரில் கலந்து வாய் கொப்பளியுங்கள்.

தினமும் இருவேளை இப்படி செய்தால், எளிதில் வீக்கம் குறைந்து நிவாரணம் தரும்.

வெங்காயச் சாறு உங்களுக்கு அசௌகரியம் கொடுத்ததென்றால், குறைந்த அளவு சாறினை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொப்பளியுங்கள்.

இது வெங்காயத்தின் அடர்த்தியை குறைத்தாலும், பலன் அளிக்கும். கிருமிகளை அழிக்கும்.

அதோடு சூடான நீரினையும் வெதுவெதுப்பான உணவுகளையுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு பின்பற்றினால், டான்சிலிடிஸ் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

முக்கிய குறிப்பு

டான்ஸிலிடிஸ் கட்டுப்பட்டதும் உடனே இனிப்பு, கார வகைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. இது மீண்டும் கிருமிகள் தொற்றிக் கொள்ள வழிவகுக்கும்.