இங்கிலாந்தில் கணவரை வெறுப்பேற்றுவதற்காக 6 மாத குழந்தையின் தலைப்பகுதியை அடித்து நொறுக்கிய தாய்க்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த கிம் ஃப்ரோஸ்ட் (37) என்கிற பெண் தன்னுடைய கணவரை வெறுப்பேற்றுவதற்காக, 6 மாத குழந்தையின் தலைப்பகுதியை கொடூரமாக அடித்து தாக்கியுள்ளார்.
பின்னர் அதனை வீடியோவாக எடுத்து தன்னுடைய கணவருக்கு அனுப்பியிருக்கிறார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், படுகாயங்களுடன் கிடந்த குழந்தையை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், குழந்தையின் மண்டை ஓட்டில் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. மூளை பகுதியும் வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த காயங்கள் கார் விபத்து அல்லது மாடியிலிருந்து விழுந்தால் மட்டுமே ஏற்படும் என கூறியிருந்தனர்.
இந்த நிலையில் வழக்கினை கேட்டறிந்த போதே ஆத்திரமடைந்த நீதிபதி, கைது செய்யப்பட்ட கிம் ஃப்ரோஸ்ட்டிற்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.