அவுஸ்திரேலிய தாயார் ஒருவர், தமது கணவர் இரு பிள்ளைகளுடன் தம்மையும் தவிக்கவிட்டு சென்ற காரணத்தை வெளிப்படுத்தியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் பெர்த் பகுதியை சேர்ந்தவர் காமிலே. மார்பக புற்றுநோயில் இருந்து மீண்ட இவர், தமது போராட்டத்தை தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு பகிர்ந்துள்ளார்.
அதில், தமது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த சில நாட்களில், சந்தேகத்தின் பேரில் பரிசோதனை மேற்கொண்ட போது, தமக்கு மார்பக புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்ததாக தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தாம் மேற்கொண்ட சோதனைகளில் இது தெரியவந்தது என கூறும் காமிலே,
திருமணம் முடிந்து பல ஆண்டுகள் குழந்தை இல்லாத நிலையில், நீண்ட 3 ஆண்டுகள் செயற்கை கருவுறுதலுக்காக முயற்சித்து தோல்வி கண்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அதன் பின்னர் இருமுறை இயற்கையாகவே கருவுற்று தற்போது இரு பிள்ளைகளையும் பெற்றெடுத்துள்ளதாக கூறும் காமிலே,
தமது மகளுக்கு பாலூட்டும் போதே, மார்பில் கட்டி இருப்பதாக உணர்ந்துள்ளார். ஆனால் அதை அவர் கருத்தில் கொள்ளவில்லை.
இந்த நிலையில் சுமார் 10 மாதங்களுக்கு பின்னர், தமது இரண்டாவது மகனை பிரசவிப்பதற்கு ஒரு வாரம் முன்னர், இன்னொரு கட்டி இருப்பதாக கண்டறிந்துள்ளார் காமிலே.
இதை தமது செவிலியரிடம் தெரிவித்து மருத்துவ சோதனைக்கும் தம்மை உட்படுத்தியுள்ளார்.
இது ஒருபுறமிருக்க, தமது கணவரிடம் இருந்து எவ்வித ஆதரவும் தமக்கு கிடைப்பதில்லை என்ற நிலை ஏற்பட்டது அவருக்கு.
மட்டுமின்றி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதையே அவர் மறுத்துள்ளார். மேலும், இது வெறும் மார்பக புற்றுநோய் தானே என ஏளனமாக பதிலளித்துள்ளார்.
இதனையடுத்து காமிலே கணவர் தமது நிறுவனத்திலேயே அதிக நேரம் செலவிட துவங்கியுள்ளார். காமிலே, புற்றுநோய்க்கான சிகிச்சையுடன், இரு பிள்ளைகளையும் கவனிக்கும் பொறுக்கு தள்ளப்பட்டார்.
மட்டுமின்றி, கவலை, பதட்டம் காரணமாக சிறப்பு சிகிச்சையும் எடுத்துக் கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
இந்த காலகட்டத்தில், கடவுள் துணைபோன்று, அவரது தோழிகளும் உறவினர்களும் வந்து உதவி செய்துள்ளனர்.
மார்பக புற்றுநோயில் இருந்து மீண்ட காமிலே தற்போது, தமது நிலை குறித்து மொத்தமும் தெரிந்த ஒரு நபரை திருமணம் செய்துகொள்ளும் முடிவில் இருக்கிறார்.