இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க வைத்த கொடூரம்!

இந்தியாவில் இளைஞர் ஒருவரை மூக்கால் காலணியை துடைக்க வைத்து கொடுமை செய்த வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மாண்ட்சர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் இளைஞர்களிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் இளைஞர் ஒருவரை தனது மூக்கின் மூலம் அங்கிருந்தவர்களின் காலணிகளை துடைக்க சொல்லி கொடுமைப் படுத்தியுள்ளனர்.

இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்த இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட இளைஞர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஒரு வாரமாக இளைஞர் வீடு திரும்பாததால் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் எதற்காக அந்த இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க சொல்லி கொடுமை படுத்தினர் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இதனிடையே இளைஞரை மூக்கால் காலணியை துடைக்க சொல்லி கொடுமை படுத்திய வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி பல அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.