டெல்லியில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த டியூசன் ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
டெல்லியை சேர்ந்த உபேந்திர சுக்லா என்பவர் டியூஷன் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இன்று அதிகாலை சுக்லாவின் தயார் கதவை தட்டி பார்த்துள்ளார்.
நீண்ட நேரமாக அறைக்கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போது, சுக்லா கத்தியுடன் அங்கு அமர்ந்திருந்துள்ளார்.
அவருக்கு அருகில் மனைவி மற்றும் 7 வயது மகளும், 5 வயது மகனும், 2 மாத குழந்தையும் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார் உடனடியாக சுக்லாவை கைது செய்தனர். நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உயரதிகாரி, சுக்லாவின் மனைவிக்கு நீரிழிவு நோய் இருந்ததால், அதனை சமாளிக்க முடியமால் அவர் திணறியுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது முழுவிசாரணைக்கு பின்னரே தெரியவரும் எனக்கூறியுள்ளார்.