இலங்கை வீரர்கள்……. புகழ்ந்து தள்ளிய இந்திய வீரர்

இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வென்ற நிலையில் அந்த அணியை இந்திய அணி முன்னாள் வீரர் முகமது கைப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை இலங்கை அணி வீழ்த்தியது.

இந்த வெற்றிக்கு மலிங்கா உள்ளிட்ட இலங்கை பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு முக்கிய காரணமாக அமைந்தது.

இது குறித்து இந்திய அணி முன்னாள் வீரர் முகமது கைப் தனது டுவிட்டரில், மலிங்கா ஒரு சாம்பியன்! இலங்கைக்கு இது ஒரு அற்புதமான வெற்றி, அவர்களின் திறமை என்ன என்பதை காட்டி விட்டார்கள் என பதிவிட்டுள்ளார்.