நடிகர் அல்லு அர்ஜுனின் மூத்த சகோதரர் அல்லு பாபி யோகா ஆசிரியை ஒருவரை இரண்டாம் திருமணம் செய்த நிலையில் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
அல்லு பாபிக்கு நீலிமா என்ற மனைவியும் அன்விதா என்ற மகளும் உள்ளனர்.
பாபிக்கும், நீலிமாவுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்ட நிலையில் கடந்த 2016-ல் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இந்நிலையில் நீலா ஷா என்ற அழகான பெண்ணை நேற்று பாபி திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டதோடு ஒரு பதிவை எழுதியுள்ளார்.
@alluarjun brother #AlluBobby wedding photos pic.twitter.com/RtfdBmTOsz
— timesalert (@timesalert1) June 22, 2019
அதில், எனக்கு திருமணம் ஆகிவிட்டது, இது என் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் ஆகும். என்னை ஆசிர்வதியுங்கள்.
எனக்கு கடந்த 2005ல் முதல் திருமணம் நடந்த நிலையில் 2016-ல் விவாகரத்து கிடைத்தது என குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து பலரும் பாபியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
முக்கியமாக மகள் அன்விதாவை கைவிட்டு விட்டீர்களே என பலரும் கேட்டார்கள்.
அதற்கு பாபி, என் மகள் சம்மதத்துடன் தான் நான் இரண்டாம் திருமணம் செய்துள்ளேன், நானும் நீலிமாவும் அவளை எப்போதும் நன்றாக கவனித்து கொள்வோம் என கூறியுள்ளார்.
Congratulations #AlluBobby #Shestipoorthi?? pic.twitter.com/l0XHnf5oLy
— VB (@Mr_ViolentBoy) June 21, 2019