மக்களவை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி யில் தே.மு.தி.க. இடம் பெற்றது. போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் தேமுதிக படுதோல்வியை அடைந்தது.
இதற்கு காரணமாக, தேமுதிக சரிவர செலவு செய்யாததே காரணம் என கூறப்படுகிறது. இதுகுறித்து சில குறிப்பிட்ட வேட்பாளர்கள் நேரில் முறையிட்டும் தலைமை மறுத்துவிட்டுள்ளது.
சில மாவட்ட செயலாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்ப எதிர்பார்த்து கார்த்திருந்தனர். இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் தேமுதிகவின் ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது. கேள்வி எழுப்ப இருந்த மாவட்ட செயலாளர்களுக்கு செக் வைக்கும் வகையில் பிரேமலதா நடக்க இருப்பதாக தெரிகிறது.
விஜயகாந்தின் சொத்துக்கள் ஏலத்திற்கு வந்ததை தொடர்ந்து, இந்த கடன்களுக்கு வட்டி கட்டிட, மாவட்ட நிர்வாகிகளிடம் நிதியுதவி கேட்க இருப்பதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிகின்றன.