மட்டக்களப்பு வந்தாறுமூலை பல்கலைகழகத்தின் பெண்கள் விடுதியின் மேல் தளத்தில் நேற்றிரவு பெரும் சத்தங்கள் கேட்டன.
அங்கு மனிதர்கள் ஓடுவதை போலவும், கட்டம் இடிக்கப்படுவதை போலவும் சத்தம் கேட்டதாக மாணவிகள் குறிப்பிட்டனர்.
இதையடுத்து விடுதியிலிருந்த மாணவிகள் கூச்சலிட்டு, அல்லோலகல்லோலப்பட்டனர். பல்கலைகழக நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, பொலிசாருக்கு விடயம் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக இராணுவம், பொலிசார் மோப்ப நாய்களுடன் அங்கு சோதனையிலீடுபட்டனர். எனினும், அங்கு சந்தேகத்திற்கிடமான எந்த நபரும், தடயமும் இருக்கவில்லை.
இதேவேளை, சில வாரங்களின் முன்னர் மதிலேறிக் குதித்து விடுதிக்குள் நுழைய முயன்ற இரண்டு இளைஞர்கள் பாதுகாவலர்களால் பிடிக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக மாணவிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
வந்தாறுமூலை பல்கலைகழக மாணவிகள் விடுதி கடற்கரையோரமாக அமைக்கப்பட்டுள்ளது.
அது பாதுகாப்பான அமைவிடமல்லவென மாணவியர் தரப்பில் நீண்டகாலமாக குறிப்பிடப்பட்டு வருகிறது.
இதையடுத்து பெண்கள் விடுதியில் நேற்றிரவு மர்மநபர்கள் நுழைந்ததாக எழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசேட தேடுதல் நடத்தப்பட்டது.