பாஜக மூத்த தலைவர் மரணம்! சோகத்தில் பாஜகவினர்!

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக தலைவராக இருப்பவர் மதன்லால் சைனி. இவர் உடல்நிலை சரியில்லாமல் இன்று மாலை இயற்கை எய்தினார். 75 வயதான மதன்லால் சைனி ராஜஸ்தான் மாநிலத்தில் 1943 ஆம் ஆண்டு பிறந்தார்.

அவர் பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். கடந்த 1990ம் ஆண்டு முதல் 92ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 2018 முதல் தற்போது வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் அவர் இருந்து வந்தார்.

இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று இறந்துள்ளார். அவருடைய இறப்புக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.