உறங்கிய குழந்தை கிணற்றில் பிணமாக மிதந்த சோகம்.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அந்நூர் அருகேயுள்ள காரியாகவுண்டனூரை சார்ந்தவர் கனகராஜ். இவரது மனைவியின் பெயர் காஞ்சனா. இவர் ஜேசிபி கனரக இயந்திரம் வாடகைக்கு விடும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்ற நிலையில்., இவர்கள் இருவருக்கும் இரண்டரை வயதுடைய அம்ருதா என்ற பெண் குழந்தை உள்ளது.

அங்குள்ள விளாங்குறிச்சியில் காஞ்சனாவின் பெற்றோரின் இல்லம் இருக்கும் நிலையில்., இவர்கள் அனைவரும் நேற்றிரவு அங்கு தங்கியிருந்துள்ளனர். இந்த சமயத்தில்., உறவினர்களும் வருகை தரவே., தம்பதி இருவரும் வீட்டிற்குள்ளே உறங்கிக்கொண்டு இருந்துள்ளனர். வீட்டிற்கு வருகை தந்த உறவினர்கள் இரவு நேரத்தில் வீட்டிற்கு வெளிய கயிற்றுக்கட்டிலில் உறங்கிக்கொண்டு இருந்துள்ளனர்.

இந்த நிலையில்., இன்று அதிகாலை இரண்டரை மணியளவில் குழந்தை அழுததால் குழந்தைக்கு பால் கொடுத்து உறங்க வைத்துள்ளனர். பின்னர் காலை நான்கரை மணிக்கு எழுந்து பார்த்த சமயத்தில்., குழந்தை இவர்களுடன் இல்லை. குழந்தை விளையாடிக்கொண்டு இருக்கும் என்று எண்ணி வீட்டை சுற்றிலும் தேடியுள்ளனர்.

குழந்தையை அங்குள்ள அணைத்து இடத்திலும் தேடிய நிலையில் குழந்தை காணாது பதறிய பெற்றோர்., அங்குள்ள பாழடைந்த கிணற்றுக்கு அருகே சென்று பார்த்த சமயத்தில் குழந்தை கிணற்றுக்குள் இறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் குழந்தையை கயிற்றை கட்டி வெளியே எடுத்த நிலையில்., குழந்தை எந்த விதமான செயல்படும் இன்றி கிடந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில்., குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது மீண்டும் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.