விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் மருதங்குடி கிராமத்தை சார்ந்தவர் ஆசை. இவரது மனைவியின் பெயர் புனிதா. இவர்கள் இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்ற நிலையில்., இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த சமயத்தில்., புனிதா ஐந்தாவது முறையாக கருவுற்றதால்., ஏற்கனவே ஐந்து குழந்தைகள் உள்ளனர் என்று கூறி கருவை கலைக்க முடிவு செய்துள்ளார். இதற்கு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற நிலையில்., இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள்., மதுரையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சென்று கருக்கலைப்பு செய்ய கூறி அறிவுறுத்தியுள்ளனர்.
இதனை கேட்ட அவர் மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு செல்லாமல்., கடந்த 12 ஆம் தேதியன்று விருதுநகரில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு இவருக்கு கருக்கலைப்பு செய்ய திட்டமிட்ட மருத்துவர்கள்., கருக்கலைப்பு செய்யாமல் குடும்பக்கட்டுப்பாடு மட்டும் செய்துள்ளனர். இந்த நிலையில்., சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி எட்டு நாட்கள் மருத்துவமனையிலேயே வைத்துள்ளனர்.
பின்னர் அவரை வீட்டிற்கு செல்ல கூறி அறிவுறுத்தி அனுப்பி வைத்த நிலையில்., திடீரென அவருக்கு கடுமையான வயிற்று வலியானது ஏற்பட்டுள்ளது. இதற்கான சோதனையை அங்குள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் எடுத்துக்கொண்ட நிலையில்.,, வயிற்றில் குழந்தை இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் கருவை ஏற்கனவே மருத்துவமனையில் கலைத்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து விருதுநகர் மருத்துவமனைக்கு சென்று விஷத்தை கூறி முறையிட்ட நிலையில்., தவறுதலாக சிகிச்சையை மாற்றி செய்து விட்டோம் என்று கூறி., மீண்டும் கருக்கலைப்பு செய்துவிடுவதாக கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த புனிதா மீண்டும் சிகிச்சை என்ற பெயரில் என்ன செய்ய காத்திருக்கிறார்களோ என்று பயந்து இரவோடு இரவாக மருத்துவமனையை விட்டு தப்பி சென்றுள்ளார்.
பின்னர் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் அவரது வீட்டிற்கு அவசர ஊர்தியை அனுப்பி வைத்தும் புனிதா அரசு மருத்துவமனைக்கு வர மறுத்துவிட்டார். நான் தனியார் மருத்துவமனையில் சென்று கருவை கலைத்து கொள்கிறேன் என்று கூறிவிட்டார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சையை மாற்றி அளித்த கொடூரமானது அதிகளவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.