இந்த உலகம் முழுவதிலுமே பல விதமான விசித்திர நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கிறது. அவ்வாறு நடைபெறும் விசித்திரமான நிகழ்வுகளில் சில அதிர்ச்சியிலும்., சில ஆச்சரியத்திலும் ஆழ்த்தி., சில சிரிப்புகளில் ஆழ்த்தியும் வருகிறது. விமானத்தில் காதல் ஜோடிகள் செய்த லீலைகள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இளம்வயதுள்ள ஜோடிகள் விமானத்தில் தாம்பத்தியம் மேற்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்துடன் இருந்து வந்துள்ளனர். இவர்களின் திட்டப்படி அயர்லாந்து நாட்டில் இருந்து துருக்கியை நோக்கி விமானம் ஒன்று பறந்து சென்று கொண்டு இருந்தது.
இந்த விமானத்தில் இருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் பயணம் செய்து கொண்டு இருந்த நிலையில்., காதல் ஜோடிகள் தாம்பத்தியம் கொள்வதற்காக கழிவறைக்கு சென்றுள்ளனர். இந்த நேரத்தில்., விமான பணிப்பெண்கள் இருவரும் ஒரே நேரத்தில் கழிவறையை உபயோகம் செய்ய கூடாது என்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த ஜோடி தங்களின் இருக்கைக்கு வந்து தாம்பத்திய உறவை மேற்கொள்ள துவங்கினர். இதனை கண்டு அதிர்ச்சியான சக பயணிகள் உங்களின் இல்லத்தில் இதனை வைத்து கொள்ளுங்கள் என்று எச்சரித்தும்., விமானத்தில் பெண்கள் குடும்பத்துடன் மற்றும் குழந்தைகளுடன் வந்துள்ளனர் என்று கூறியும் கண்டுகொள்ளாது தாம்பத்தியத்தை துவங்கியுள்ளனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விமான பெண்கள் அவர்களிடம் எடுத்து கூறியும் ஒன்றும் கண்டுகொள்ளாது தாம்பத்தியத்தை அரங்கேற்றியுள்ளனர். இதனால் பயணிகள் விரக்தியான நிலையில்., இவர்களின் அந்தரங்க காட்சிகள் வெளியே தெரியாமல் இருப்பதற்கு திரையிட்டு மறைத்து வந்துள்ளனர். இதனையடுத்து விமானம் தரையிறங்கியதும் தயாராக இருந்த காவல் துறையினர் காதல் ஜோடியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.