தாயின் நகைகளின் உதவியுடன் சாதிக்கச் சென்ற யாழ் இளைஞன்…!

தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களினால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று மிகவும் பிரம்மாண்டமாக நடிகர் கமலினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இம்முறை 17 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இந்த 17 போட்டியாளர்களில் இரண்டு இலங்கையர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

அதில் ஒருவர் தொகுப்பாளினி லாஸ்லியா, இவர் கிளிநொச்சியை சேர்ந்தவர். அடுத்த போட்டியாளர் யாழ்ப்பாணத்தினை சேர்ந்த தர்ஷன்.தர்ஷன் சாதிக்க துடிக்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களில் ஒருவர். ஆரம்பத்தில் IT கம்பெனியில் வேலை செய்துள்ளார்.எனினும், சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் அம்மாவின் நகைகளை அடகு வைத்து நாடுகடந்து இந்தியா சென்றுள்ளார்.இதேவேளை, பல திறமைகள் இருந்தும் யாழ்ப்பாணத்தில் கடந்த காலத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலையால் அவருக்கான வாய்ப்புகள் எதுவும் கிடைக்க வில்லை.எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு முயற்சிகளை எடுத்து இன்று பிக்பாஸ் போட்டிக்குள் சென்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இருந்து சென்ற பின்னர் ஒரு வருடத்தில் இரண்டு படமாவது நடிக்க வேண்டும் என்பதுதான் அவரின் இலட்சியம் என்றும் உருக்கமாக கமல் முன்னிலையில் குறிப்பிட்டுள்ளார். பொருத்திருந்து பார்ப்போம் தர்சனின் வாழ்க்கை பிக்பாஸ் வீட்டில் பிரகாசிக்குமா? இல்லையா என்பதை..!