ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது இதில் 151 சட்டமன்ற தொகுதிகளில் ஜெகன் மோகனின் YSR காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. கடந்த முறை ஆட்சி செய்த சந்திரபாபு நாய்டுவின் தெலுங்கு தேசம் கட்சி 24 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது ஆலோசனை கூட்டங்கள் நடத்துவதற்காக பிரஜா வேதிகா என்ற புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
ஆந்திர பிரதேசத்தில், சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக்காலத்தின் போது உண்டவள்ளி பகுதியில் பிரஜா வேதிகா என்ற கூட்ட அரங்கம் கட்டப்பட்டது. ஆந்திராவில் ஜெகன் மோகனின் ஆட்சி மாற்றம் வந்த பிறகு, அந்த கட்டடத்தை அப்படியே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் ஜெகன் மோகனுக்கு தெலுகு தேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வரும் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்தார்.
சந்திரபாபு நாயுடு வைத்த கோரிக்கைக்கு அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் அளிக்கப்பாடாமல் இருந்த நிலையில், நேற்று பிரஜா வேதிகா கட்டடத்தில் இருந்த அனைத்து பொருட்களும் வெளியேற்றப்பட்டது.
இதனையடுத்து, பிரஜா வேதிகா கட்டடம் சட்ட விரோதமாக கட்டப்பட்டதாக கூறி அந்த கட்டிடம் முழுவதையும் இடிக்க ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று உத்தரவிட்டார் . இதனை தொடர்ந்து கட்டடிடத்தை இடிக்கும் பணிகள் நாளை மறுநாள் முதல் தொடங்க உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது