அமமுக நிர்வாகிகள் பலரும் டிடிவி தினகரன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.
இந்நிலையில் அமமுக மாநில கொள்கை பரப்புச் செயலாளரும், தேனி மாவட்ட செயலாளருமான தங்கதமிழ்செல்வன் அதிமுகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக பேசி வருகிறது. சமீபத்தில் அதிமுக அமைச்சர் அளித்த பேட்டியின் போது தங்கதமிழ்செல்வன் அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம் என்று தெரிவித்திருந்தார்.
தங்க தமிழ்செல்வன் அதிமுக இணைய அமைச்சர்கள் பச்சைக்கொடி காட்டி உள்ள நிலையில், அமமுகவில் உட்கட்சி பிரச்சனை நிலவி வருகிறது. குறிப்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எம்எல்ஏவுக்கும், தங்கதமிழ்செல்வன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அதிமுகவில் இருந்து தங்க தமிழ்செல்வனிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்ட போதிலும், தங்க தமிழ்செல்வன் அதை மறுத்தார்.
இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அமமுக நிர்வாகி ஒருவரிடம் தங்கதமிழ்செல்வன் தொலைபேசியில் உறியடி ஆடியோ ஒன்று சமூகத்தில் வெளியாகியுள்ளது. இந்த ஆடியோவில் அண்ணன் எங்கே இருக்கிறார், அந்த மாதிரி அரசியல் செய்வதை உங்கள் அண்ணனை நிறுத்தச் சொல்லுங்கள். நான் விஸ்வரூபம் எடுத்தால் நீங்கள் அழிந்து போய்விடுவார்கள். நான் நல்லவன்.
தேனி மாவட்டத்தில் கூட்டம் போடுகிறேன், நாளைக்கு மதுரையில் கூட்டம் போடுகிறேன் நீ பார் என்ன நடக்கிறது என்று உங்கள் டிடிவி தினகரனிடம் சொல்லு இந்த மாதிரி அரசியல் செய்தால் தோற்றுப் போய் விடுவோம்,ஜெயிக்க மாட்டோம் என்று தங்க தமிழ்ச்செல்வன் பேசி ஆடியோ வைரலாகி வருகிறது. இதன் மூலம் தங்க தமிழ்செல்வன், தினகரனுக்கு மிரட்டல் விடுவது போல் உள்ளது.