பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதில் பாத்திமா பாபு, லொஸ்லியா, சாக்ஷி அகர்வால், மதுமிதா, கவின், சரவணன், வனிதா விஜயகுமார், சேரன், அபிராமி ஐயர், மோகன் வைத்யா, சாண்டி, முகென் ராவ், தர்ஷன், ரேஷ்மா, ஷெரின் ஆகிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று உள்ளனர்.
இவர்கள் 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தங்கி, அங்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகளை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்பது போட்டி நீதிமுறை. இறுதியில் மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்களை வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.நேற்று 15 போட்டியாளர்கள் அறிமுகம் செய்து வைத்து, பிக் பாஸ் வீட்டிற்குள் கமலஹாசன் அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த மாடல் லொஸ்லியா போட்டியாளராக பிக் பாஸ் சீசன் 3 நுழைந்துள்ளார். இவர் அங்கிருக்கும் செய்தி நிறுவனம் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ளார்.