முதல் இடத்தை பிடிக்குமா? ஆஸ்திரேலியா!

இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று 32 வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ளது.

இதில் ஆஸ்திரேலியா அணி 6 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. ஆஸ்திரேலியா அணி புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இங்கிலாந்து அணி 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

இரு அணிகளும் உள்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தை பிடிப்பதற்காக வெற்றி பெறுவதில் அதிக முனைப்புடன் விளையாடும். இங்கிலாந்து அணியும் இரண்டாம் இடத்தை பிடிப்பதற்காக விளையாடும் என தெரிகிறது.