நடித்த படத்தில் இருந்து விலகிய வாணி போஜன்.!

திரைத்துறையில் இருக்கும் சின்னத்திரையில் நடித்த பல நடிகர்கள் பெரிய திரையில் அறிமுகமாகி பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர். அந்த வகையில் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது நல்ல நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன்., மா.க.பா ஆனந்த் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் உள்ளனர்.

அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் உள்ள பிரபல நாடகத்தில் நடித்து வந்த வாணி போஜன் தற்போது திரையில் அறிமுகமாகவுள்ளார்.

வாணி போஜன் லோகேஷ் குமார் இயக்கும் எண் 4 என்ற படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆனார். திடீரென அப்படத்தில் இருந்து விலகியுள்ளார். கால்ஷீட் பிரச்சினை காரணமாக தன்னால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை என்று காரணம் கூறியுள்ளார்.

தற்போது அவருக்கு பதிலாக சரண்யா துராதி நடிக்கிறார். நடிகர் வைபவ் நடிக்கும் சிக்ஸர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் படத்தின் வாணி போஜன் நடித்து வருகிறார்.