தோழியை சிறுமி என்றும் பாராது ஐந்து நாள் இரவு பகலாக கொடூர வன்கொடுகைக்கு உள்ளாக்கிய கொடூரம்.!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஓங்கோல் மாவட்டத்தில் அரங்கேறிய கொடூரமானது வெளிவந்து பெரும் அதிர்வலையை இந்தியா முழுவதும் பதிவு செய்துள்ளது. அங்குள்ள ஆர்டிசி பேருந்து நிறுத்தத்தில் கடந்த ஜூன் 17 ஆம் தேதியன்று சிறுமி ஒருவர்., பேருந்திற்க்காக பேருந்து நிறுத்தத்தில் காத்து கொண்டு இருந்துள்ளார்.

இந்த சமயத்தில் அந்த வழியாக வந்த சிறுமியின் நண்பன் ஒருவர் நான் கொண்டு அந்த இடத்தில் சேர்க்கிறேன் என்று கூறவே., சிறுமி கொடூரனின் வார்த்தைகளில் உள்ள விபரீதத்தை அறியாமல் அவனுடன் சென்றுள்ளார். இந்த நேரத்தில், சிறுமியை தனது இல்லத்திற்கு அழைத்து சென்ற கொடூரன் தனது ஐந்து நண்பர்களுக்கும் சிறுமியை விருந்தாக்கி, கொடூர முறையிலான கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஐந்து நாட்கள் தொடர்ந்து உட்படுத்தியுள்ளான்.

இதில், இருந்து தப்பித்த சிறுமி ஐந்து நாட்கள் கழித்து அங்குள்ள காவல் நிலையத்தில் சென்று தனக்கு நடந்த கொடுமையை கூறவே., உடனடியாக அவருக்கு தேவையான சிகிச்சையை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பெறப்பட்ட நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொள்ள துவங்கினர்.

அந்த விசாரணையில், இளம் பெண்ணை கற்பழித்த ஷேக்பாஜி மற்றும் அவனது நண்பர்கள் ஸ்ரீதர், மகேஷ், மற்றும் 4 மாணவர்கள் உள்பட மொத்தம் 7 பேரை கைது செய்தனர். இதுகுறித்து, இளம்பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் ஓங்கோல் சென்று மகள் நிலையை அறிந்த அவர்கள் கண்ணீர் விட்டு கதறினர். பின்னர் அவர்களிடம் சிறுமி ஒப்படைக்கப்பட்டாள்.

பின்னர் சிறுமியின் பெற்றோர், “எங்கள் மகளை சீரழித்தவர்களை நடுத்தெருவில் வைத்து தூக்கிலிட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர். பின்னர் ஆந்திரா மந்திரி சுஜாதா, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும், அந்த காமக்கொடூரனுகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும் என்றும் உறுதியளித்துள்ளனர்.