பிக்பாஸ் வீட்டில் யுத்தம் ஆரம்பம்..

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நேற்று முன் தினம் தொடங்கியது. பிக் பாஸ் போட்டியாளர்கள் முதல் நாள் வீட்டுக்குள் சென்று என்ன செய்தார்கள் என்பது பற்றி முதல் எபிசோடு நேற்று ஒளிபரப்பானது. அதில் வனிதா விஜயகுமார் வீட்டில் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து நள்ளிரவில் அபிராமி, ஷெரின் இடையே உரையாடல் சுவாரசியத்தை உண்டாகிறது.

அப்போது அபிராமி, கவின் மீது தனக்கு ஈர்ப்பு உள்ளதாக கூறினார். கவின் மனத்தில் காதல் இருப்பதை தெரிந்து கொண்டு பின்பு காதலை கூறுவேன் என அபிராமி கூறினார்.

இந்நிலையில் இரண்டாவது நாள் ஒளிபரப்பாக இருக்கும் ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டு உள்ளது. அதில் நடன ஆசிரியர் சாண்டி, ஜாலியாக இருக்கும் பிக் பாஸ் வீட்டில் அடுத்த வாரத்தில் இருந்து யுத்தகளமாக மாறும் என நினைக்கிறேன். அந்த காலத்தில் நானும் இருப்பேன் என நினைக்கிறேன் என்று கூறினார். அவர் கூறியதை வைத்து பார்க்கும்போது பிக்பாஸ் வீட்டில் கடந்த சீசனில் நடந்தது போலவே சண்டைகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டில் சாண்டி 100 நாட்கள் தாக்குப் பிடிப்பாரா? இல்லை டாஸ்க்குகள் முடிக்க முடியாமல் வெளியேறுவாரா? விரைவில் தெரியவரும்.