கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் அருகே, சிறுமுகை எஸ்.ஆர்.எஸ். நகரை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு நர்மதா (22) என்ற மனைவி இருந்துள்ளார். இவர், துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.
அந்த புகாரில், “கடந்த 2015-ம் ஆண்டு எனக்கு திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தின்போது 60 பவுன் நகை மற்றும் சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டது. தான் புதிய தொழில் தொடங்குவதாகவும், வெளிநாடு செல்ல இருப்பதாகவும் எனது கணவர் தெரிவித்தார். ஆனால், கூறியபடி நடந்து கொண்டார்.
இந்நிலையில், ஒரு பெண் குழந்தை பிறந்தது. விஜயகுமார் கூடுதல் வரதட்ணை கேட்டு என்னை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றினார். எனவே அவர் மீதும், உடந்தையாக உள்ளவர்கள் மீதும்உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த புகாரில் கூறியிருந்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை வழக்குப்பதிவு செய்து விஜயகுமார் மற்றும் அவரது தாய் செல்வி அவரது தாய்மாமன் ரமேஷ் ஆகிய 3 பேர் மீது பெண் வன்கொடுமை சட்டம் உள்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கணவர் விஜயகுமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.