இவ்வுலகத்தில் இன்னும் தீர்க்க முடியாத பல பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில்., பெரும்பாலான நாடுகளில் பெரும் தொல்லையாக இருப்பது கள்ளக்காதல் பிரச்சனைதான்… இதனால் அரங்கேறிய கொலைகள் மற்றும் குற்றங்கள் எண்ணிக்கை நாளுக்குள் நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் துளரே கவுண்டி பகுதியில் வசித்து வரும் பெண்மணி கோரல் லிட்டில் (வயது 41). இவருக்கு இவரது மகளின் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறவே இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில்., இந்த தகவலானது மகளுக்கு தெரியவரவே., இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து இது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு., நீதிமன்றத்தில் வழக்கானது நடைபெற்று வந்தது.
இத்தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் சுமார் 15 வருடங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டனர். மேலும்., இது தொடர்பான முறையற்ற உறவு பழக்க வழக்கங்கள் அந்த பகுதியில் அதிகளவு நடைபெறுவதாகவும்., இந்த விவகாரத்தில் சிக்கும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.