திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையானது செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் மற்றும் நர்சுகள்., அட்டண்டர்கள் என யாரும் சரிவர பணிக்கும் வருவதில்லை., மருத்துவர்கள் பற்றாக்குறையும் இருக்கிறது.
இந்த நிலையில்., மருத்துவமனையில் பணியில் இருக்கும் நர்சுகள் கூட நோயாளிகள் வந்தால் எந்த விதமான சிகிச்சையும் அளித்ததில்லை. இந்த சமயத்தில்., மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும் பெண்கள் சிகிச்சை அளித்தது பெரும் அதிர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பான வீடியோ காட்சிகளானது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில்., இளம்பெண்ணொருவருக்கு தலையில் பலத்த காயமானது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு மருத்துவமனைக்கு வந்த நிலையில்., மருத்துவர்கள் இல்லை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அங்கிருந்த நர்ஸ்களிடம் சிகிச்சையளிக்க கூறி கூறவே., அங்கிருந்த நர்ஸ் அருகில் இருந்த துப்புரவு பணியாளரிடம் பெண்ணிற்கு சிகிச்சை அளிக்க கூறி கூறியுள்ளார். இதனை கேட்ட துப்புரவு பணியாளர் பெண்ணிற்கு அறுந்துபோன கோணிப்பையை தைப்பது போல தைத்துள்ளார்.
மயக்க மருந்துகள் மற்றும் ஊசிகள் கூட செலுத்தப்படாத நிலையில் காயத்தை தைக்க துவங்கிய பெண் சகட்டு மேனிக்கு தைக்கவே., வலியை தாங்க முடியாமல் பெண் அம்மா… அப்பா…. என்று அபயக்குரலிட்டது அங்குள்ள மக்களை பெரும் துயரத்திற்கு ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில்., பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்ட துப்புரவு பணியாளர் அவ்வுளவுதான் முடிந்துவிட்டது… இன்னும் ஒரு தையல்தான் என்று அசால்ட்டாக கூறியுள்ளார். அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த இந்த துயரமானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.